முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் குறைந்து வரும் கரோனா: இன்றைய பாதிப்பு 1,550, பலி 207 

தில்லியில் புதிதாக 1,550 பேருக்கு திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
தில்லியில் குறைந்து வரும் கரோனா: இன்றைய பாதிப்பு 1,550, பலி 207 
பகிர்:

தில்லியில் புதிதாக 1,550 பேருக்கு திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 1,550 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,18,418 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 207 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 23,409 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 4,375 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 13,70,431 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

நோய் பாதித்த 24,578 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர். இதனிடையே நோய்த் தொற்று உறுதியாகும் விகிதம் 7.55 சதவீதமாக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.