தமிழ்நாடு

விமானத்தில் திருமணம் நடந்த விவகாரம்: விசாரணை நடத்த உத்தரவு

DIN

மதுரையில் நடு வானில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், திருமணம் நடந்த விமானத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை - தூத்துக்குடி இடையே தொழிலதிபரின் மகன் திருமணம் நடுவானில் விமனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபர் மகன் ராகேஷ். மதுரை தொழிலதிபர் மகள் தீக்சனா இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவர்களின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட பெற்றோர்கள், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை (வாடகைக்கு) முன்பதிவு செய்தனர். 
அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் 161 பயணிகளுடன் அந்த விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. இதில் மகமகன் மற்றும் மணமகளின் உறவினர்களுக்கு மட்டும் பிரத்தோகமாக அனுமதிக்கப்பட்டனர்.

விமானம் காலை 7.30 மணிக்கு புறப்பட்ட நிலையில் நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்ட திருமணம் நடைபெற்றது. விமானம் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT