தமிழ்நாடு

கருப்புப் பூஞ்சையால் தமிழகத்தில் 38 பேர் பாதிப்பு: மா.சுப்பிரமணியன்

DIN

கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அடுத்துள்ள மேலக்கூட்டுடன்காடு பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கிராம மக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து  தென் மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறேன். இதை தொடர்ந்து நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில்  உள்ள கிராமப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்‌.

மேலும் ஊரடங்கு காரணத்தால் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக குறைவாக காணப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கருப்புப் பூஞ்சை தொற்றால் தமிழகத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு பயப்படத் தேவையில்லை என்றார். 

கருப்பு பூஞ்சை நோய் குறித்து கண்டறியும் மருத்துவ வல்லுநர்களுடன் இன்னும் இரண்டு நாள்களில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT