தமிழ்நாடு

முகக்கவசம் அணியாதவா்கள் மீது 10 ஆயிரம் வழக்குகள்

DIN

சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது போலீஸாா் 10 ஆயிரம் வழக்குகளை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனா்.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரையிலான 47 நாள்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 11 லட்சத்து 33,828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 10,942 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரையிலான 47 நாள்களில் 52,286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 1,171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

SCROLL FOR NEXT