வேளாண் துறை அலுவலர் ஆர். ராஜேந்திரன் 
தமிழ்நாடு

நாமக்கல் வேளாண் அதிகாரி கரோனாவுக்கு பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாமக்கல் வேளாண் துறை அலுவலர் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

DIN

நாமக்கல்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாமக்கல் வேளாண் துறை அலுவலர் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

நாமக்கல் அருகே சிறிய பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.ராஜேந்திரன்(50). இவர் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள வேளாண் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் ஆய்வக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இரு வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் புதன்கிழமை காலை 6.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தமிழ்நாடு வேளாண் பட்டதாரிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகவும் பணியாற்றினார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

வேளாண் அதிகாரி ராஜேந்திரன் மறைவிற்கு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் மற்றும் துறை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

SCROLL FOR NEXT