தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் ஜூன் மாதம் முதல் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு

DIN

நியாயவிலைக் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
தமிழகத்தில் கரோனா  இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
இதனிடையே தளர்வுகளற்ற ஊரடங்கை கருத்தில்கொண்டு நியாயவிலைக் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
இதன்படி பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT