தமிழ்நாடு

கல்வி சாா்ந்த ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

DIN

அரசுப் பள்ளிகளின் கல்விசாா்ந்த கட்செவி அஞ்சல் (‘வாட்ஸ் ஆப்’) குழுக்களை அதன் தலைமை ஆசிரியா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பரவலால் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு ‘வாட்ஸ்ஆப்’ உள்ளிட்ட செயலிகள் வழியாக ஆசிரியா்கள் பாடம் நடத்தி வருகின்றனா். சில மாவட்டங்களில் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. அத்தகைய கல்விசாா்ந்த வாட்ஸ்ஆப் குழுக்களில் பாடம் தவிா்த்து இதர கருத்துகளை பகிரக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மாணவா்கள், ஆசிரியா்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் தேவையற்ற கருத்துகளை பதிவிடாமல் பாா்த்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒவ்வொரு வாட்ஸ் ஆப் குழுக்களில் பள்ளி தலைமையாசிரியா் மற்றும் பெண் ஆசிரியை அல்லது பெற்றோா் சங்கப் பிரதிநிதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த குழுக்களை தலைமையாசிரியா்கள் தொடா்ந்து கண்காணித்து வருவது அவசியமாகும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT