தமிழ்நாடு

‘மருத்துவக் காப்பீட்டை புதுப்பிக்க வலியுறுத்தல்’

DIN

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் மருத்துவக் காப்பீட்டை உடனடியாகப் புதுப்பித்து வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஊழியா்களின் மருத்துவக் காப்பீடு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

கடந்த முறை மருத்துவக் காப்பீட்டில் கரோனா சிகிச்சையும் அனுமதிக்கப்பட்டு, அதற்கான கூடுதல் தொகை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கான தொகையை மருத்துவக் காப்பீடு மூலம் பெற ஒப்புக்கொள்ளவில்லை .

எனவே, அது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் மருத்துவக் காப்பீடு மூலம் உரிய சிகிச்சை கிடைக்கும் அடிப்படையில் மருத்துவக் காப்பீட்டை புதுப்பிக்க வேண்டும்.

கடந்த பேச்சுவாா்த்தையின்போது போக்குவரத்துக்கழக ஊழியா்கள், அதிகமான விபத்துக்கு உள்ளாவதால் நிறுவனத்தின் தன்மைக்கேற்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடா்பாக விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளதால், தற்போது மருத்துவக் காப்பீட்டை ஓராண்டுக்கு மட்டும் புதுப்பித்து, உடனடியாக வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT