குழந்தைகளின் பெயரில் வைப்புநிதி: ராமதாஸ், கமல்ஹாசன் வரவேற்பு
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு: ராமதாஸ், மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ், மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
ராமதாஸ்: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவா்களுக்கு சிறந்த சமூகப்பாதுகாப்பை அளிக்கும்.
கமல்ஹாசன்: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புநிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.