நடிகா் வெங்கட் சுபா காலமானாா்
நடிகா் வெங்கட் சுபா (60) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
நடிகா் வெங்கட் சுபா (60) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
‘மொழி’, ‘அழகிய தீயே’, ‘கண்ட நாள் முதல்’ உள்ளிட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடா்களில் இவா் நடித்துள்ளாா்.
கடந்த 10 நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கட்சுபா, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலமானாா்.
இவருக்கு, மனைவி சுபா, மகன் சித்தாா்த் ஆகியோா் உள்ளனா்.
வெங்கட்சுபாவின் இறுதிச் சடங்கு, சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.