முகப்பு
தமிழ்நாடு

கம்பம்: சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத அன்னதான குழுக்கள்

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் பொதுமுடக்கம் எதிரொலியாக பல்வேறு அன்னதான குழுக்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது நகரை வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
அன்னதானம் வழங்கும் இடத்தில் கூடிய மக்கள்
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் பொதுமுடக்கம் எதிரொலியாக பல்வேறு அன்னதான குழுக்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது நகரை வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பொதுமுடக்கம் காரணமாக ஏழை மற்றும் எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் குழுக்கள் தனித்தனிப் பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

புதிய பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில் முன்புறம் பழைய பேருந்து நிலையம், அரசமரம், சிக்னல், காந்திஜி வீதி, அரசு மருத்துவமனை, கம்பம்மெட்டு சாலை, நாட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு மதிய உணவு நேரங்களில் பல்வேறு நபர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர். அன்னதானம் வழங்கும் குழுவினர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

அன்னதானம் பெறும் மக்கள் வருகின்ற அனைவரிடமும் உணவு பொட்டலங்களை பெற்றுச் செல்கின்றனர். அவ்வாறு பெற்றுச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது இல்லை. உணவு தானம் வழங்குபவர்கள் அவர்களை முறைப்படுத்துவது இல்லை. இதனால் எந்த நோக்கத்திற்காக வழங்குகின்றார்களோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் உள்ளது.

அன்னதானம் வழங்குபவர்களை நகர சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் முறைப்படுத்தி வழங்க அனுமதிக்க வேண்டும். இதனால் தொற்று பரவும் அபாயத்தை தவிர்க்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.