முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் கருணை அடிப்படையில் 8 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பணியில் இருக்கும்போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகளை இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 8 வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.

ஜி. அசோக், த/பெ. (லேட்) கோவிந்தராஜ் காடையாம்பட்டி, சேலம் மாவட்டம், ஆர்.எம். மோகன்ராஜ் த/பெ. (லேட்) ராஜா, கன்னங்குறிச்சி, சேலம் மாவட்டம், எஸ்.சாந்தி க/பெ. (லேட்) எ.சிவலிங்கம், மூங்கில்பாடி,ஓமலுர், சேலம் மாவட்டம், பி. குமார், தா/பெ. (லேட்) சின்னம்மாள் கொல்லப்பட்டி, ஓமலுர், சேலம் மாவட்டம், ஜ. ராணி, க/பெ. (லேட்) ஜெ.ஜெயசீலன் தாத்தையங்கார்பட்டி, சேலம் மாவட்டம், கே. இந்துமதி, க/பெ. (லேட்). மேகநாதன் பொன்னம்மாப்பேட்டை, சேலம் மாவட்டம், ஆர். ரவிச்சந்திரன் த/பெ. (லேட்) ராஜேந்திரன் புதூர் கொல்லப்பட்டி, ஓமலூர், சேலம் மாவட்டம், ஆகிய 7 நபர்களுக்கு தொழிலாளர் பணிக்கான ஆணைகளையும் ஆர்.ராஜாஜெயசீலன், த/பெ. (லேட்) ராஜா வட்டக்காடு, ஓமலூர் சேலம் மாவட்டம் ஆகியோருக்கு இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை அமைச்சர் வழங்கினார்.

மேற்கண்ட தொழிலாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளருக்கு பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஓர் ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ஒன்றுக்கு தொழிலாளர்களுக்கு ரூ.5500/-ம், இளநிலை உதவியாளருக்கு ரூ.7600/-ம் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.

ஓராண்டு பயிற்ச்சிக்கு பின்னர் தகுதிகாண் பருவம் நிர்ணயிக்கப்பட்டு காலமுறை ஊதியம் (ஊதிய விகிதப்படி) வழங்கப்படும். இந்நிகழ்வில் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஆர். பிருந்தா தேவி இ.ஆ.ப., மேலாளர் (பணியாளர் மற்றும் நிர்வாகம்) திரு. எஸ். தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →