முகப்பு
தமிழ்நாடு

அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கரோனா நிவாரண நிதி, ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள் வழங்கல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

கரோனா நிவாரண நிதி, ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள் வழங்கல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறைச் செயலாளர், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வழங்குவது, ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள் வழங்குவது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.