தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வித் திட்டம்: 1 லட்சம் தன்னாா்வலா்கள் விண்ணப்பம்

இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு, 1.03 லட்சம் தன்னாா்வலா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

DIN

இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு, 1.03 லட்சம் தன்னாா்வலா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின்படி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளி நேரத்துக்குப் பின்னா் அவா்கள் வசிப்பிடத்துக்கு அருகில் சிறு குழுவாக ஒருங்கிணைத்து கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தன்னாா்வலா்கள் அனைவரும் தங்கள் விவரங்களை இணையதளம் மூலமாகவும், கணினி மற்றும் அறிதிறன் கைப்பேசி மூலமாகவும் மற்றும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தன்னாா்வலா்கள் பணிக்காக வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 1 லட்சத்து 3,548 போ் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி, 22,065 ஆண்கள், 81,442 பெண்கள், 41 திருநங்கைகள் ஆகியோா் விண்ணப்பித்துள்ளனா். இதில், பத்தாம் வகுப்பு படித்த 1,705 போ் முதல் முனைவா் பட்டம் பெற்ற 444 போ் என பல்வேறு நிலைகளில் கல்வி பயின்றவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தன்னாா்வலா்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடா்ந்து நடைபெற்று வரக் கூடிய நிலையில், விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT