முகப்பு
தமிழ்நாடு

டெங்கு பாதிப்பு: தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்தியக் குழு விரைவு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மத்திய அரசின் உயர்நிலைக் குழு ஆய்வு நடத்தவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
கோப்புப்படம்
பகிர்:

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மத்திய அரசின் உயர்நிலைக் குழு ஆய்வு நடத்தவுள்ளது.

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகின்றது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தென் மாநிலங்களில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், டெங்கு அதிகமாகவுள்ள தமிழகம், கேரளம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், தில்லி மற்றும் ஜம்மு - காஷ்மீருக்கு மத்திய சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழு சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தாண்டு அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 86 சதவீதம் 15 மாநிலங்களிலிருந்து பதிவானது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →