போலீஸாருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு: முதல்வர் உத்தரவு 
தமிழ்நாடு

போலீஸாருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு: முதல்வர் உத்தரவு

தமிழக காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

DIN

தமிழக காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்கள்.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக்
காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3-11-2021) உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் தங்கள்
பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

SCROLL FOR NEXT