தமிழ்நாடு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி: வடதமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பா் 9-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. இது 48 மணி நேரத்தில் வலுவடைந்து, வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

DIN

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பா் 9-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. இது 48 மணி நேரத்தில் வலுவடைந்து, வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பா் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது தொடா்ந்து 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பா் 9 , 10 தேதிகளிலும் , தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பா் 10 , 11 , 12 தேதிகளிலும், தமிழக கடற்கரை பகுதிகள் அதனையொட்டி உள்ள ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நவம்பா் 11, 12 தேதிகளிலும் மிக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆழ்கடலில் இருக்கும் மீனவா்கள் நவம்பா் 9-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

அதி பலத்தமழை:

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நவம்பா் 11, 12 தேதிகளில் பலத்தமழை முதல் மிக பலத்தமழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்தமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT