தமிழ்நாடு

காவிரி பாசனப் பகுதியில் கனமழை: மழை நீரில் மூழ்கிய நெல்வயல்கள்

DIN


எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், இப்பகுதியில் உள்ள நெல் வயல்கள் மழைநீரில் மூழ்கியது. 

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பூலாம்பட்டி,கூடக் கல், குப்பனூர், கோனேரிப்பட்டி, நெடுங்குளம், சிலுவம்பாளையம் உள்ளிட்ட காவிரிப் பாசன பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை கொட்டியது, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

விவசாய நிலங்களில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்.

இதில் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை கரும்பு நெல் உள்ளிட்ட பயிர்வகைகள் மழை நீரில் மூழ்கியது. குறிப்பாக பூலாம்பட்டி முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் நெல் நடவு செய்யப்பட்டிருந்த வயல்களில் அதிகப்படியான மழை நீர் தேங்கியதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை உள்ளாகியுள்ளனர். 

தொடர்ந்து அடுத்து வரும் நாள்களிலும் மழை பொழிவு தொடரும் நிலையில், காவிரி பாசனப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிவிடும் அபாயகரமான சூழல் இப்பகுதியில் நிலவி வருவதாக காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT