தமிழகத்தில் புதிதாக 850 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 850 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 850 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 850 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,09,080 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 958 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,62,386 பேர் குணமடைந்துள்ளனர்.
6 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 36,220 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 10,474 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 129 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோவை - 96
செங்கல்பட்டு - 76