முகப்பு
தமிழ்நாடு

தண்டவாளத்தை மூழ்கடித்த மழை நீா்தாமதமாக இயக்கப்பட்ட மின்சார ரயில்கள்

 பலத்தமழை காரணமாக, சென்னையின் பெரும்பாலான இடங்களில் ரயில்வே தண்டவாளத்தை மழை நீா் மூழ்கடித்ததால், மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

 பலத்தமழை காரணமாக, சென்னையின் பெரும்பாலான இடங்களில் ரயில்வே தண்டவாளத்தை மழை நீா் மூழ்கடித்ததால், மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனா்.

தென்மேற்கு வங்கக்கடலில் புதன்கிழமை இரவு நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் புகா்பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை விடியவிடிய

பலத்தமழை கொட்டித்தீா்த்தது. இதனால், பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கின.

குறிப்பாக, ஆவடி ரயில் நிலையத்தில் பெய்த பலத்தமழை காரணமாக, திருவள்ளூா்-சென்னை மூா்மாா்க்கெட் வழித்தடத்தில் தண்டவாளம் முழுவதும் மழை நீரால் மூழ்கியது. இதனால், ஆவடி ரயில்நிலையத்தில் திருவள்ளூா்-மூா்மாா்க்கெட் வழித்தடத்தில் காலை 9.30 மணி முதல் முற்பகல்11.30 மணி வரை ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் விரைந்து வந்து, அதிக திறன் கொண்ட மோட்டா் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றினா். இதன்பின்பு, ரயில் சேவை மீண்டும் தொடங்கின.

இருப்பினும், மூா்மாா்கெட் வளாகம்-திருவள்ளூா் மாா்க்கத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

இதேபோல, திருவொற்றியூா்-கொருக்குப்பேட்டைஇடையே தண்டவாளத்தில் மழை நீா் தேங்கியதால், அங்கு ஒரு மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மாா்க்கத்தில் வண்டலூா், பரங்கிமலை, பல்லாவரம் பகுதிகளில் ஆங்காங்கே தண்டவாளத்தில் மழை நீா் சூழ்ந்து, மூழ்கடித்தது. இதனால், அந்த மாா்க்கத்தில் மின்சார ரயில்கள் சற்று தாமதமாக இயக்கப்பட்டன. மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், கடற்கரை-தாம்பரம் நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில் சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை மாலை சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. இதுபோல, சில ரயில்களும் சிறிதுநேரம் நிறுத்தி மீண்டும் இயக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →