முகப்பு
தமிழ்நாடு

வழக்கமான அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
வழக்கமான அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
பகிர்:

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நாளை (நவ.13) முதல் வார நாள்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொதுவிடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.