பள்ளிக் மாணவர்கள் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கனமழை காரணமாக செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதன்கிழமை இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக முக்கியச் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்கியது. 

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் திருவள்ளூரை பொறுத்தவரை நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT