முகப்பு
தமிழ்நாடு

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை (நவ.13) உருவானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை (நவ.13) உருவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் கூறியது:

தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, அடுத்தடுத்து வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வடக்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவ.15-ஆம் தேதி நிலை கொள்ளும். இதன்பிறகு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆந்திரப் பிரதேச கடற்கரையை நவ.18-ஆம் தேதி அடையும். இந்த

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகத்துக்கு வருமா என்பதை இப்போது கூறமுடியாது. ஆனாலும், தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

குமரிக் கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவம்பா் 17-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →