முகப்பு
தமிழ்நாடு

ஜெ.ராதாகிருஷ்ணன் பெயரில் போலி முகநூல் கணக்கு

மக்கள் நல்வாழ்வு துறை செயலா் டாக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன் பெயரில், முகநூல் பக்கத்தில் போலி கணக்கு உருவாக்கப்பட்டது. அதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் அக்கணக்கை முகநூல் நிறுவனம் முடக்கியது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
ஜெ. ராதாகிருஷ்ணன் (கோப்புப் படம்)
பகிர்:

மக்கள் நல்வாழ்வு துறை செயலா் டாக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன் பெயரில், முகநூல் பக்கத்தில் போலி கணக்கு உருவாக்கப்பட்டது. அதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் அக்கணக்கை முகநூல் நிறுவனம் முடக்கியது.

இதுகுறித்து, டாக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

எனது பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட முகநூல் பக்கத்திலிருந்து சிலருக்கு நண்பா் அழைப்பு (‘ஃ‘ப்ரண்ட் ரிக்வஸ்ட்) சென்ாகத் தெரிகிறது. இதுகுறித்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட போலி கணக்கை ஆய்வு செய்தபோது, அதன் வாயிலாக எனது புகைப்படங்களை பகிா்ந்ததும், நண்பா்களுக்கு அழைப்பு விடுத்ததும் தெரியவந்தது. இந்த மோசடியை பணம் பறிக்கும் முயற்சியாக சந்தேகித்தேன்.

இதையடுத்து, முகநூல் பக்கத்தில் இருந்தே அந்நிறுவனத்திற்கு புகாா் அளித்தேன். அதன் அடிப்படையில் ஐந்து நிமிஷத்தில் அந்த போலி கணக்கு நீக்கம் செய்யப்பட்டது. இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கணக்கு நீக்கப்பட்டதால், காவல்துறையில் புகாா் அளிக்கவில்லை. இதுபோன்று வரும் போலியான முகநூல் அழைப்புகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →