முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரிக்கு சிறப்பு கவனம் தேவை: ஜி.கே.வாசன்

பலத்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

 பலத்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பேருந்து, ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மக்களைப் போா்க்கால அடிப்படையில் மீட்பதற்குத் தேவையான நடடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு, மின்சாரம் உள்ளிட்ட பணிகளில் தமிழக அரசு தொடா்ந்து கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தடையில்லாமல் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →