மானாமதுரை கூட்டுறவு  சங்கத்தில் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 
தமிழ்நாடு

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொசுக்கடியால் பால் உற்பத்தி பாதிப்பு: ஆவினுக்கு அனுப்பப்படும் அளவு குறைந்தது

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொசுக்கடியால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆவினுக்கு அனுப்பப்படும் அளவு குறைந்துள்ளது.

DIN


மானாமதுரை: மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொசுக்கடியால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆவினுக்கு அனுப்பப்படும் அளவு குறைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் மழை காரணமாக கொசு உற்பத்தியாகி மாடுகள் கொசுக்கடியால் அவதிப்படுவதால் அவற்றின் பால் கறவை திறன் பாதிக்கப்பட்டு கூட்டுறவு பால் சங்கங்களுக்கு கொள்முதலுக்கு கொண்டுவரப்படும் பாலின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக காரைக்குடி ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் பாலின் அளவும ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது. 

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்களில்  உறுப்பினர்களாக உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து. தினமும் காலை, மாலையில் கொள்முதல் செய்யப்படும் பால் இரு நேரங்களிலும் கூட்டுறவு பால் சங்கங்களில் மக்களுக்கு சில்லரை விலையில்  விற்பனை செய்தது போக மீதமுள்ள பால் கேன்களில் அடைக்கப்பட்டு வாகனங்கள் மூலம் காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. 

கடந்த சில நாள்களுக்கு முன்புவரை இப் பகுதிகளில் மாடுகளின் கறவைத்திறன் கூடி பால் உற்பத்தி அதிகரித்ததால் சில்லறை விற்பனை போக காரைக்குடி ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் பாலின் அளவு தொடர்ந்து பலநூறு லிட்டராக அதிகரித்து வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மானாமதுரை,திருப்புவனம் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுக்கடி அதிகரித்துள்ளது. மாடுகள் கொசுக்கடியால் அவதிப்படுவதால் மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு கறவை திறன் படிப்படியாக குறைந்து வருகிறது. 

இதனால் மானாமதுரை,திருப்புவனம் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்களுக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் பாலின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சில்லரை விலையில் பால் விற்பனை செய்தது போக காரைக்குடி ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் பாலின் அளவு ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே வருகிறது. 

மழை ஓய்ந்து வெயில் நிலவி சீரான காலநிலை ஏற்பட்டு கொசு உற்பத்தி குறைந்தால் தான் மாடுகளுக்கு பால் உற்பத்தி கூடுதலாகி கறவை திறன் அதிகரிக்கும் என  மாடு வளர்ப்போர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT