தமிழ்நாடு

மேட்டூர் அணை: உபரிநீர் திறப்பு 35,000 கனஅடியாக அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணைக்கான நீரவரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில் 41 ஆவது ஆண்டாக அணை நிரப்பியுள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக உயர்ந்தது. 

அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிந்த நிலையில், தற்போது வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அணைநீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT