தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 8-வது கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

DIN


சென்னை: தமிழகத்தில் எட்டாவது கட்டமாக 50,000 இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ஆம் தேதி 16.43 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 25.04 லட்சம் பேருக்கும், கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி 17.19 லட்சம் பேருக்கும், 10-ஆம் தேதி 22.52 லட்சம் பேருக்கும், 23-ஆம் தேதி 22.33 லட்சம் பேருக்கும், 30-ஆம் தேதி 17.14 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையே, தொடா் மழை காரணமாக கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் எட்டாவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50,000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகினறன.

சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் இரண்டாம் தவணைக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவைதவிர மருத்துவா் தலைமையிலான குழுவினா் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT