தமிழ்நாடு

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணை நிறைவு

கோவையில்  பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின்  விசாரணை நிறைவு பெற்றது.

DIN

கோவையில்  பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின்  விசாரணை நிறைவு பெற்றது. இது தொடர்பாக விரைவில் அறிக்கை சமர்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 17 வயது மாணவி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கோவையில் உள்ள தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

மாணவி புகார் அளித்தும் போலிஸில் தகவல் சொல்லாமல் இருந்த அப்பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனையும் போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் பள்ளி கல்வித் துறை விசாரணை திங்கள்கிழமையுடன் நிறைவான நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

 பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை பள்ளிக் கல்வித் துறையிடம் புதன்கிழமை சமர்ப்பிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT