தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்தும் - நீர் திறப்பும் சம அளவில்

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக நீடிக்கிறது. அணை நிரம்பிய நிலையில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து சீராக இருப்பதால் திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 40,000 கன அடியாக நீடிக்கிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கன அடி நீரும் 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு  பகுதிகளில் மழை தொடர்வதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. மழையளவு 28.40 மி.மீ.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

மகாராஷ்டிரத்தில் தேஜகூ - இந்தியா இடையே கடும் போட்டி

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

SCROLL FOR NEXT