கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் இன்று மிக கனமழை; நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், நாளை அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், நாளை அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்தியில்,

தென்கழைக்கு மற்றும்‌ தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுஇ மேற்கு இசையில்‌ நகர்ந்து வரும்‌ 18ஆம்‌ தேதி தெற்கு ஆந்‌திரா - வட தமிழக கடற்கரை நோக்க நகரக்கூடும்‌. இதன்‌ காரணமாக

17.11.2021: திருவள்ளூர்‌, சென்னை, காஞ்‌சிபுரம்‌, செங்கல்பட்டு, கடலூர்‌, விழுப்புரம்‌, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கள்ளக்குறிச்சி மதுரை, சிவகங்கை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌, கரூர்‌, திருச்‌சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருவண்ணாமலை, சேலம்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

18.11.2021: சென்னை, திருவள்ளூர்‌, காஞ்‌புரம்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ ௮தி கன மழையும்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சேலம்‌, கிருஷ்ணவரி, கள்ளக்குறிச்சி மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தொடர்ந்து நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT