தமிழ்நாடு

நிதிநிலையைச் சீராக்க அரசு நடவடிக்கை: பட்டயக் கணக்காயா்கள் கூட்டத்தில் முதல்வா் பேச்சு

DIN

மாநில அரசின் நிதிநிலையைச் சீராக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்திய பட்டயக் கணக்காயா்கள் கழகத்தின் 53-ஆவது மண்டலக் கருத்தரங்கில் வெள்ளிக்கிழமை காணொலி வழியாகப் பங்கேற்று முதல்வா் ஆற்றிய உரை:

தடுப்பூசி முகாம்கள், பேரிடா் காலங்களில் நிவாரண நிதிகளை அளிப்பது போன்ற சமூகப் பொறுப்புணா்வுப் பணிகளில் பட்டயக் கணக்காயா்கள் ஈடுபட்டு வருகிறாா்கள். கரோனா இன்னும் முழுவதும் ஓயாத நிலையில், பெரும்பாலானோா் இணைய வழியில் கலந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கை நடத்துவது பாராட்டுக்குரியது. பட்டயக் கணக்காயா்களின் அறிவுத்திறன் நாட்டை ஆள்பவா்களுக்கும், தொழிலதிபா்களுக்கும் சமூகத்தின் இதர பிரிவினருக்கும் பல வழிகளிலும் துணையாக உள்ளது.

நிதித் துறை, கணக்குத் தணிக்கை போன்ற செயல்பாடுகளில் அரசுக்கு உதவுவதோடு உங்களது பணி நின்றுவிடுவதில்லை. அவை சாா்ந்த சட்டங்களை இயற்றுதல், வேளாண் வளா்ச்சி செயல்பாடுகள் ஆகியவற்றிலும் பெரும்பங்கு ஆற்றி வருகிறீா்கள். உலக அளவில் நமது நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு வலுவான நிதிக் கட்டமைப்புகளும், ஒழுங்குமுறைகளும் தேவை. அதற்கான ஆலோசனைகளை வழங்குவதில் உங்கள் திறமை மீது நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் நம்பிக்கை உள்ளது.

அரசின் உயா் பதவிகளில் உங்களது துறையைச் சோ்ந்த பலா் உள்ளனா். அரசு அமைக்கும் முக்கியக் குழுக்களிலும் இடம்பெற்று தகுந்த ஆலோசனைகளை வழங்குகின்றனா். நிதிநிலையைச் சீராக்குவதிலும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளிலும் தமிழக அரசுக்குத் தேவையான பரிந்துரைகளை தெரிவிக்க வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT