முகப்பு
தமிழ்நாடு

எச்சரிக்கை: 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 22 நவம்பர், 2021 at 10:15 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:01 AM

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.  கடந்த 19-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வடதமிழகம், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

Advertisement

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும். இதன் காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிலப்பகுதிக்கு மிக அருகில் உள்ளதால் இது அடுத்தக்கட்டமாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.