தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வா் நாத் பதவியேற்பு

DIN

சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமை பதவியேற்றாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானா்ஜி, மேகாலயா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து அலகாபாத் உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தாா்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT