முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

‘தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகன்’: அபிநந்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

‘வீர் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் அபிநந்தன் வர்தமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

DIN

‘வீர் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் அபிநந்தன் வர்தமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தான் போர் விமானத்தை கடந்த 2019ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியதற்காக கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்தார்.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

'என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: பாஜக தனது அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது - திருமா | செய்திகள்: சில வரிகளில் | 30.9.25

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு!

தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு!

நியூசி.க்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்!

பிகார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT