தமிழ்நாடு

சென்னையில் இன்று எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

DIN

சென்னையில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன
போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.

1. நீர் தேங்கியுள்ள சாலைகள்:-

  • மெரினா சர்வீஸ் சாலையில் (கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர்
  • சிலை வரை) வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
  • மயிலாப்பூர், மாதா சர்ச் ரோடு (வாகனங்கள் மெதுவாக செல்கின்றது)
  • வடபழனி, பெரியார் பாதை (100 அடி சாலை) வாகனங்கள் மெதுவாக
  • செல்கின்றது.

2. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்:-

  • சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாககே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.
  • பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தி.நகர், பசூல்லா சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டுவருகிறார்கள். இதன் காரணமாக ஜி.என்செட்டிசாலை–வாணிமஹால் சந்திப்பிலிருந்து பசூல்லாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT