முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதியில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

சென்னையின் பல்வேறு பகுதியில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக, சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், சென்னை ஓட்டேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மீண்டும் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனிடையே செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்து ஒரு மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →