தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்தத் தயார்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்தத் தயார் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு அளித்தது. அதில், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம். 

ஜெயலலிதாவுக்கு வழஙகப்பட்ட மருந்துகள், சிகிச்சைகள் பற்றி உண்மை தெரியவேண்டுமெனில் விசாரணையை விரிவுபடுத்த வேண்டும்

எனவே, ஆறுமுகசாமி ஆணையத்தை முடக்குவதை ஏற்கமுடியாது.மாறாக, இருநபர் விசாரணை ஆணையம் அமைக்க அரசு தயாராக உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT