முகப்பு
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தமிழகத்தில் கரையை கடந்துள்ளன. இந்நிலையில், புதிதாக வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளைமுதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மீண்டும் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.