பேரறிவாளன் 
தமிழ்நாடு

ராஜிவ் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய பேரறிவாளனின் மனு டிச.7-ல் விசாரணை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

DIN

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று  தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஆளுநர் இதுகுறித்து முடிவெடுக்காமல் உள்ளார். 

இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், வழக்கினை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி இந்த வழக்கினை விசாரிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT