தமிழ்நாடு

அண்ணா பிறந்தநாள்: 700 ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க அரசாணை வெளியீடு

DIN

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி(செப்.15) 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவித்தாா்.

அதன்படி, தமிழகம் முழுவதும் நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மதவாதம், ஜாதி மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT