பாபநாசம் கோவில் படித்துறையில் உள்ள மண்டபத்தை மூழ்கியபடி செல்லும் வெள்ளப்பெருக்கு 
தமிழ்நாடு

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: தாமிரவருணி அணையில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

காரையார், சேர்வலாறு அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாபநாசம் கோவில் படித்துறை, கல்மண்டபம், பிள்ளையார் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது.

DIN


அம்பாசமுத்திரம்: காரையார், சேர்வலாறு அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாபநாசம் கோவில் படித்துறை, கல்மண்டபம், பிள்ளையார் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது.

நெல்லை மாவட்டம், பாபநாசம் காரையார் அணை மற்றும் சேர்வலாறு அணைக்கு நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இரு அணைகளுக்கும் 17 ஆயிரம் கன அடி நீர்வரத்தும், இரு அணைகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாபநாசம் கோவில் படித்துறை, கல்மண்டபம், பிள்ளையார் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது.

தொடர்ந்து தாமிரவருணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்று அருகே செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்பிபிஎஸ்: முதல் சுற்று கலந்தாய்வு தேதி நீட்டிப்பு

அந்தியூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

அடிப்படைக் கல்வியால் அறிவு, ஒழுக்கம் மேம்படும்: அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி

லாரியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

இறைச்சி கடைக்காரா் கொலை: இளைஞா் மீது குண்டா் சட்டம்

SCROLL FOR NEXT