தமிழ்நாடு

மாஞ்சோலை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு

DIN

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இயல்பு  வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் பிரபல சுற்றுலாத்தலமான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி மற்றும் குதிரைவெட்டி தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தென்தமிழகத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் மாஞ்சோலை சுற்றுவட்டார பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மேலும் அப்பகுதியில் சாலைகள், தேயிலை தோட்டத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT