ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ. 1 லட்சமாக உயர்வு
ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தலா ரூ. 1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தலா ரூ. 1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சரவரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1200-லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகையினை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
இத்திட்டத்திற்க்கென, 2021-22ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் ரூ. 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-21ஆம் ஆண்டு முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தில் 1,124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.