முகப்பு
தமிழ்நாடு

ஆம்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: காவல்துறை விசாரணை

ஆம்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

ஆம்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியகுப்பம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இந்தியா ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் ஏடிஎம் மைய மேலாளர் ராஜேஷ் குமாருக்கு அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை காலை தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் ஏடிஎம் மைய மேலாளர் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பேரில் ஏடிஎம் மைய மேலாளர் ராஜேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.