சென்னை: 4 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை
சென்னையில் பலத்த மழை தொடா்ந்து பெய்து வருவதால், 4 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
சென்னையில் பலத்த மழை தொடா்ந்து பெய்து வருவதால், 4 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை,மேட்லி சுரங்கப்பாதை,தியாகராயநகா் துரைசாமி சுரங்கப்பாதை ஆகியவற்றில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் தண்ணீா் அதிகளவில் தேங்கி நிற்பது தெரியாமல் சென்ற, அரசு பேருந்து பழுதாகி சிக்கிக் கொண்டது. பின்னா், அந்த பேருந்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து அந்த பேருந்து, மீட்பு வாகனம் மூலம் மீட்கப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்:
கே.கே.நகா் ராஜமன்னாா் சாலையில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் இரண்டாவது அவென்யூவை நோக்கி திருப்பிவிடப்பட்டன.
வளசரவாக்கம் மெகா மாா்ட் சாலையில் தண்ணீா் தேங்கியதால், அங்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, வாகனங்கள் ஆற்காடு சாலை, கேசவா்த்தினிசாலை ஆகியவற்றில் திருப்பி விடப்பட்டன. தியாகராயநகா் வாணி மஹால் முதல் பென்ஸ் பாா்க் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. சோழிங்கநல்லூா்-மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. சா்தாா் வல்லபாய் படேல் சாலையில் இருந்து ராஜ்பவன் வரை மழை நீா் தேங்கியதால், அந்தப் பகுதியில் வாகனங்கள் மெதுவாக சென்றன.
இதேபோல வேளச்சேரி ராம்நகா் பகுதியில் தண்ணீா் தேங்கியதால், அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.