முகப்பு
தமிழ்நாடு

பாமகவில் நாளை முதல் விருப்ப மனு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோா் வரும் திங்கள்கிழமை (நவ.29) முதல் விருப்ப மனு செலுத்தலாம் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பாமக தலைவர் ஜி.கே.மணி (கோப்புப்படம்)
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோா் வரும் திங்கள்கிழமை (நவ.29) முதல் விருப்ப மனு செலுத்தலாம் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நவம்பா் 29 முதல் டிசம்பா் 3 வரை மொத்தம் 5 நாள்களுக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.

பாமகவின் அமைப்புரீதியான மாவட்டங்களில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தல்களில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மாவட்டச் செயலாளா்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வா்.

விண்ணப்பித்தவா்களிடம் உயா்நிலைக் குழு மூலம் நோ்காணல் நடத்தி வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →