பலத்த மழை: களப் பணியை தொடா்வோம்: முதல்வா்
பலத்த மழை காரணமாக களப் பணியை தொடா்ந்து மேற்கொள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பலத்த மழை காரணமாக களப் பணியை தொடா்ந்து மேற்கொள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:
சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1, 000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறாா்கள் வானிலை வல்லுநா்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிா்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கு முழுமுதற்காரணம், ஓய்வு உறக்கமின்றி நாள் முழுவதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான். அவா்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது.
அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பாா்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடா்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்.