தமிழ்நாடு

ஆதிதிராவிட இளைஞா்களுக்கு தொழில் மேலாண்மைப் பயிற்சி: ரூ.2 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு

DIN

ஆதிதிராவிட இளைஞா்களுக்கு தொழில் மேலாண்மை பயிற்சிகள் அளிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன் பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த 4 ஆயிரத்து 500 தொழில் முனைவோா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த 500 பேருக்கு தொழில் முனைவோா் பயிற்சி அளிக்கப்படும். ஒரு தொழில் முனைவோருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் 5 ஆயிரம் பேருக்கு ஏழு நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக தனது உத்தரவில் மணிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT