பூம்புகார்: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சந்திர பாடி முதல் கொடியம்பாளையம் வரை ஏராளமான மீனவக் கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேற்கண்ட கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை, ஞாயிற்றுக்கிழமை 5-ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதையும் படிக்க | மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று பிரசவம் பார்த்து கொண்ட எம்பி
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தற்போது கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
அதன்படி கடந்த ஐந்து நாள்களாக நாங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிகப்பட்டுள்ளதாக கூறினர்.
இதன் காரணமாக பூம்புகார் மற்றும் பழையாறு மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.